வட, கிழக்கில் கைச்சின்னத்திலேயே போட்டி?

slfp
slfp

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட கிழக்கில் கை சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதென முடிவெடுத்திருந்தாலும், அனைத்து மாவட்டங்களிலும் இதன்படி களமிறங்க வேண்டிய தேவையில்லை.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பெரமுனவை விட, சுதந்திரக்கட்சி அதிக வாக்கை பெற்றிருந்தது. இவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் பொதுஜனபெரமுனவின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்தனர்.

தலைமைக்கு இது தொடர்பில் தெரிவித்ததனை அடுத்து இதற்கான மாற்று யோசனையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.