சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிக்கு உயிரிழப்பு!

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிக்கு உயிரிழப்பு!

ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 21 வயதுடைய பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஹுங்கம பிரதேசத்தில் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த வீதி வழியாக பயணித்த வாகனத்தில் இருந்த பிக்குவின் மீது குண்டு பாய்ந்தது.

இதனையடுத்து படுகாயமடைந்த பிக்கு அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுபவர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் கருத்துரை வழங்கும் ஜனாதிபதி

“ஆசியாவின் எதிர்காலம்” சர்வதேச மாநாட்டில் கருத்துரை வழங்கவிருக்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் என்றவகையில் ஜனாதிபதி கோத்தாபய ...