சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / 18 கிலோ கேரள கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

18 கிலோ கேரள கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மது வரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன் போது வீட்டிலிருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அத்துடன் குறித்த வீட்டிருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உட்பட கைது செய்யப்பட்டவரை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வவுனியாவில் இரு சிறுமிகள் மீது தந்தையர் பாலியல் வன்புணர்வு!

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த ...