இந்திய அணித்தலைவர் புதிய சாதனை!

virat
virat

நேற்று நடைபெற்ற இந்திய அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி புதிய இரு சாதனைகளை படைத்துள்ளார்.

அணித்தலைவராக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கட்டில் (டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருபது) அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர் எனும் சாதனையினை படைத்தார்.

இதற்கு மன்னர் இச்சாதனை முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியிடம் இருந்தது.

விராட் கோலி அணித்தலைவராக இதுவரை 199 இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி 11,208 ஓட்டங்களை பெற்றுள்ளார். டோனி 330 இன்னிங்சில் 11,207 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

இதேபோல், கோலி 14 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தலைவராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்களைகளை கடந்த சாதனையையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.