முல்லைத்தீவில் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புமாறு எம்.பிக்களிடம் கோரிக்கை

IMG 9524
IMG 9524

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கூடிய கவனஞ் செலுத்துமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார் .

முல்லைத்தீவு – உண்ணாப் பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் வெற்றிடம் நிலவுவதாகவும் இதனால் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையான மாஞ்சோலை மருத்துவமனையில், 60 வைத்தியர்கள் பணியாற்றவேண்டிய நிலையில், வெறுமனே 28 வைத்தியர்களே பணியாற்றுவதாக தெரிவித்தார்.

இவ்வாறாக பாரிய வைத்தியர் வெற்றிடம் நிலவுவதன் மூலமே அதிகளவான மரணச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் உரியவர்களுடன் பேசி மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளைஎடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.