சீனாவில் வைரஸ் தாக்கம் – இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Corona
Corona

சீனாவில் வேகமாக பரவி வரும் கெரோனா வைரஸ், நாட்டில் பரவாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக விமான நிலையத்தின் சுகாதார பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடிமன், போன்ற அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் விசேட பரிசோதனைக்குட்படுத்தபடவுள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவும் அபாயம் தற்போது இல்லை எனவும் தொற்று நோய் ஆய்வு பிரிவின், விசேட நிபுணர் டொக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.