தென்மராட்சி நகர கல்வி மட்டத்தை உயர்த்தவேண்டும் – வசந்தி அரசரட்ணம்

07
07

தரம் 1 இல் இந்த ஆண்டு 150 மாணவர்கள் மட்டுமே தென்மராட்சி பகுதியில் அனுமதி கோரிய நிலையில் ஏனையோர் நகரை நோக்கி ஓடுவதனை மாற்றி, நகரின் கல்வி நிலையை தென்மராட்சியிலும் ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும் பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நேற்றைய தினம்
தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் தலமையில் இடம்பெற்றது .நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரைநாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று 150 பேரே தென்மராட்சியில் ஆண்டு ஒன்றிற்கு அனுமதிக்கு விண்ணப்பித்தனர் . இப்போதும் பெரிய பாடசாலை, நல்ல தனியார் கல்வி நிலையம் என இரண்டையும் எதிர்பார்த்து நகரை நோக்கி மாணவர்கள் ஓடுகின்றனர் . அதற்காக பெற்றோரும் செல்லும் நிலமையே காணப்படுகின்றது.

கல்வியை ஓர் சமநிலையில் கொண்டுவரவும் தனியார் நிலையங்களில் அரச பாடசாலை ஆசிரியர்கள் கற்பிப்பதில் ஓர் வரையறையினையும் அரசு ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே இவற்றின் மூலம் எதிர் காலத்தில் தென்மராட்சியினை வளப்படுத்த கல்வியினை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் . அதேநேரம் அந்த வசதிகளை இங்கும் ஏற்படுத்தி நகரை நோக்கி ஓடியவர்களை இங்கே வரவழைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .