சரவணபவனுக்கு ஆசனம் வழங்ககூடாது – சுமந்திரனின் பேச்சிற்கு கூட்டமைப்பிற்குள் எதிர்ப்பு

ss 1
ss 1

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சரவணபவனுக்கு நாடாளுமன்ற தோ்தலில் ஆசனம் வழங்ககூடாது என சக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு கட்சியின் தலைவரிடம் நேரில் முன்வைத்த கோரிக்கை தொடா்பில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது.

2010ம் ஆண்டு தேசியப்பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினா் எம். ஏ.சுமந்திரன் கட்சியை ஆட்டிப்படைப்பதா? என கட்சியின் தீவிர ஆதரவாளா்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.

பல வருடங்களாக மக்களுடன் இருந்து சேவையாற்றிய ஒருவருக்கு ஆசனம் கொடுக்ககூடாது என அவா் எப்படி கேட்க முடியும்? என ஆதரவாளா்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கட்சியின் யாழ். மாவட்ட கிளைக்குழு கூட்டத்திலும், நாடாளுமன்ற உறுப்பினா் சரவணபவனுடனும் கட்சி உறுப்பினா்கள் பலா் ஆதரவாக பேசியதாகவும் உள்வீட்டு தகவல்கள் கூறுகின்றன.

சுமந்திரன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தாலும் வட்டுக்கோட்டைத் தொகுதிக்குரிய வேட்பாளா் யார் என்பதை வட்டுக்கோட்டைத் தொகுதிக்கிளையே தீா்மானிக்கும். அதனை சுமந்திரன் தனித்து தீா்மானிக்க முடியாது என்று பெயா் குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சியின் இளைஞா் அணி முக்கியஸ்தா் ஒருவா் கருத்து வெளியிட்டார்.

நேற்று இரவு இருபாலையில் உள்ள சரவணபவனின் விடுதி வீட்டில் ஒன்றுகூடிய ஆதரவாளா்கள் சுமந்திரன் கட்சித் தலைமை சொல்வதை மட்டுமே செய்யவேண்டும் அல்லது கட்சிக் கட்டமைப்பில் உள்ளவா்கள் கூடி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து தான் சொல்கின்றவாறு கட்சித் தலைவா் செயற்பட வேண்டும் என்று சுமந்திரன் எதிர்பார்ப்பாரானால் நாம் அதனை வெறுமனே கைகட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தீா்மானம் எடுத்து அதனை சரவணபவனுக்கு அறிவித்துள்ளனர்.

அவா் கருத்து வெளியிட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தோ்தலில் பத்துவருடங்கள் பதவி வகித்தவா்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படையில் சரவணபவனுக்கு ஆசனம் வழங்கப்படாவிட்டால் வட்டுக்கோட்டைத் தொகுதி வேறுவிதமாக வியூகம் அமைக்கும்

என்றும் அது தமிழரசுக்கட்சியின் பல பெரிய தலைகளின் வெற்றிக்கே ஆப்பாக அமையும் என்றும் அவா் மேலும் தெரிவித்தார்.