காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை!

1 qo
1 qo

ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உடனான சந்திப்பின் போது காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பிரதிநிதி நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு தொடர்பில் சாதகமாக பதிலளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான தமது திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள்புலிகள் இயக்கத்தினால் கொண்டுசெல்லப்பட்டவர்கள் அல்லது பலவந்தமாக இணைக்கப்பட்டவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.