பாடசாலை செல்லும் மாணவர் குழுவே கடந்த காலத்தில் ஆட்சி நடத்தியது!

1 thi
1 thi

நாட்டின் தனித்தன்மை குறித்து அறிவில்லாத பாடசாலை செல்லும் மாணவர் குழுவொன்றே கடந்த காலத்தில் ஆட்சி நடத்தியுள்ளது .

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

எமது வீட்டில் குழந்தைகளுடன் மனைவியுடன் அல்லது சகோதரியுடன் இணைந்து கேட்கக்கூடிய சொற்களா அவரது உரையாடல்களில் உள்ளது? எமது நாட்டின் நம்பிக்கைத்தன்மையை பாதிப்புறச் செய்த ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமையையும் நீக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதாலேயே கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்குவதற்கு ஆதரவு வழங்கியதாகவும் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.