ஓய்வூதியம் பெறுபவர்களின் தகவல்கள் நவீன மயமாக்கம்

pension
pension

ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நவீன மயப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் (20) அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் தலைமையில் நடைபெற்றது.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“சில பகுதிகளில் உயிரிழந்த ஓய்வூதியக்காரர்களின் பணத்தை மோசடியாக பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டு, ஓய்வூதியக்காரர்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஓய்வூதிய திணைக்களம், வருடாந்தம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது 6 லட்சத்து 41,000 பேர் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் 25 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்குகின்றது” என தெரிவித்தார்.