நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்கள் இருவர் விலகல்?

Dhawan
Dhawan

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா விளையாடுவார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிவரும் இஷாந்த் ஷர்மாவுக்கும் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.