நலம் தரும் நல்லெண்ணெய்

oil
oil

உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை.

நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் அழகாகும்.

கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்

சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது.

ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும்.