அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

gt1
gt1

அமெரிக்காவின் அலஸ்காவில் இன்று(23) காலை 5.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

அலஸ்காவின் யு.டி.சி. அலுடியன் தீவுகளில் காணப்படும் தனகா எரிமலைக்கு கிழக்கே 22 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 10 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை.

அத்தோடு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.