இலங்கை அணிக்கு இலகு வெற்றி

sl vs zim
sl vs zim

சிம்பாபே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 358 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 515 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாவே அணி 170 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது 14 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது

வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கினை அடைந்தது.

ஆட்நாயகனாக இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது.