உடலில் உள்ள பல நோய்களை விரட்டும் பனங்கருப்பட்டி

large 1528225312
large 1528225312

கிராமப்பகுதிகளில் பனங்கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது.

அந்தவகையில் பனங்கருப்பட்டி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவப்பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கல்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

கருப்பட்டி இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். வெள்ளைக் சர்க்கரைக்கு பதில் இதனை பயன்படுத்துவதால் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது.

சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்துடன் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

உணவில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், நரம்புகளும் உறுதியாகும்.