இந்தியா சென்ற சிவாஜிலிங்கம் – பயணத்தடை நீக்கமா?

sivajili
sivajili

நீண்டகாலமாக இந்தியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் (24) திடீரென இந்தியாவிற்குப் பயணமாகியுள்ளார்.

நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் விசுவாசி என்ற காரணத்திற்காக இந்தியாவிற்கான நுழைவு விசா அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு மறுக்கப்பட்ட காலத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயமும் அனுமதி மறுக்கப்பட்டதோடு ஓர் முறை இந்திய விமான நிலையத்தில் தரை இறங்கிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

இதேநேரம் வட மாகாண சபையில் உறுப்பினராக இருந்த சமயம் 10 மாகாண சபை உறுப்பினர்கள் இந்தியா பயணித்த சமயம் சிவாஜிலிங்கத்திற்கு விசா வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்தமையினால் அவரின் பெயர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே 10 நாள் பயணமாக சிவாஜிலிங்கம் இந்தியா பயணிப்பதற்கு நேற்று முன்தினம் (23) நுழைவு விசா வழங்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இந்தியாவில் தரை இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.