சமூக வலைத்தளங்கள் – புதிய சட்டம் அறிமுகம்

5a L
5a L

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுக்கநெறி, மத ரீதியாக அவமதிக்கும் கருத்து பதிவுகள் வெளியிடுவதனை நிறுத்த இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக முறையற்ற பதிவுகளை தடை செய்வதற்கு புதிய சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை உடனடியாக தயாராகிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் கமல் குணரத்ன, இலங்கை கணினி அவசர பிரச்சார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.