சுதந்திர தினத்தையொட்டி விசேட போக்குவரத்து திட்டம்

indipendance
indipendance

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 26, 31, 2, 3 ஆகிய நாட்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்பட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.