சீனாவில் நேற்று ஒரே நாளில் 13 பேர் மரணம்!

1 Medic
1 Medic

சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரையான தகவல்களின்படி குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் பலியானதாக சீனாவின சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை, 130 நோயாளிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் சீன சுகாதாரத்துறைத் அதிகாரிகள் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று மட்டும் 323 பேர் பாதிப்புக்களுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1975-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்டது.

காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கும் பரவியது.