ஐரோப்பிய குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

f02ced0e aea8 4d6d b902 bacbf8ec22cc
f02ced0e aea8 4d6d b902 bacbf8ec22cc

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று (25) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்தனர்.

இடம்பெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு அவசியத்தினையும் இரா.சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.