நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா மீண்டும் வெற்றி

rahul
rahul

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 2வது ரி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாண சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் மார்டின் குப்டில், ரிம் ஷீபர்ட் தலா 33 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கட்டுக்களையும், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ரா, ஷிவம் துபே தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்திய அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக இந்திய அணியின் லோகேஸ் ராகுல் தெரிவு செய்யப்பட்டார்.

2வது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.