கட்சிகளின் கண்ணியத்தை பாதிக்கும் முகப்புத்தக விவாதங்களை தவிர்க்குமாறு வலியுறுத்து

22
22

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் முகப்புத்தக விவாதங்களில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை முன்னெடுக்காமல் கட்சிகளின் கண்ணியத்தை பாதுகாக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் முகநூல் பதிவொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது முகப்புத்தகத்தில்,

“அரசியல் பிரமுகர்களின் அரசியல் கொள்கைகள் மற்றும் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் சாணக்கியங்கள் ஆகியவற்றை முகப்பு பக்கத்தில் விமர்சனம் செய்வது இயல்பு. அதனை விவாதப்பொருளாக் கொண்டு ஆக்கபூர்வமாக விவாதிப்பது சிறப்பு.

ஆனால் அண்மைக்காலமாக முகப்புக்கத்தில் பதிவுகள் சில எல்லை மீறி தனிநபர்களின் வாழ்வியலுக்கு களங்கம் விளைவிக்கிற வகையில் அமைகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை பிரதிபலிக்கின்ற ஒரு சிலர் முகப்பு பக்கத்தில் இடுகின்ற பதிவுகள் அதன் கீழானா விவாதங்கள் ஒரு ஆராக்கியமான நல் சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு உகந்தவையல்ல.

குறித்த கட்சிகளினை பிரதிபலிக்கின்ற ஒரு சிலரின் இவ்வாறான கீழ்த்தரமான தனிநபர் வசைபாடவால்களின் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன என்பதனை அறியமுடியாமல் உள்ளது.

அதற்கு மேலாக நீங்கள் பரிபாலனம் செய்கின்ற கட்சி தலைமைக்கு இச் செயல்கள் மகிழ்ச்சியளிக்குமா? என்பதற்கு மாறாக கட்சிகளினைப் பிரதிபலிக்கின்ற இவர்களது இவ்வாறான பதிவுகள் நிச்சயம் அவர்கள் பரிபாலனம் செய்கின்ற கட்சித் தலைமைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் அவமானத்தையும் தோற்றுவிக்கும் என்பது மட்டும் உண்மை

சிலரது தனிநபர் வசைபாடல் தொடர்பான முகப்பு பக்க பதிவுகள் கௌரவ சபைகள் என்று உரைக்கும் சபைகளில் அநாகரிகமான பேசும் பொருளாகவும், பதிவுகளை இட்டவர்கள் மீது புகார் கொடுக்கும் நிகழ்வுகளும் முகப்பு பக்கத்தில் தனிநபர்களை விமர்சனம் செய்து பதிவுகளை இட்டவர்கள் அவ் முகப்பு பக்கத்திலேயே மன்னிப்பு கேட்ட சம்பவங்களும், தனிநபர்களை விமர்சனம் செய்தவர்கள் விமர்சனம் செய்தவர்களுடைய தொலைபேசி இலக்கங்களை தேடிப் பிடித்து மன்னிப்பு கேட்ட சம்பங்களும் தொடருகின்றன.

பதிவுகளை உரியமுறையில் தனிநபர்களின் வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளை எடுத்தியம்பாமல் அவர்கள் பற்றி கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை முன்னெடுக்காமல் கருத்துக்களை நாகரீகமான கருத்துக்காளால் எதிர்கொண்டு இருந்தால் இந்நிலை உருவாக்கியிருக்காது. கட்சி வேறுபாடுகள் மற்றும் அரசியல் காழ்புணர்ச்சிகளுக்கு அப்பால் நல்ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தினை உருவாக்கவேண்டிய கடமைப்பாடு எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. ஆனால் முகப்புபக்கங்களில் இடப்படுகின்ற இவ்வாறான கீழ்தரமான கருத்துக்கள் அதில் பதிப்பை ஏற்படுத்தும்

எனவே தாங்கள் பரிபாலிக்கின்ற கட்சிகள் சார்பாக அதன் கொள்கைகள் சார்பாக அவர்கள் விடுகின்ற தவறுகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வுகளை விவாதங்களை மேற்கொள்ளுங்கள் அதை விடுத்து தனிநபர்களை வசைபாடுகின்ற கீழ்தரமான பதிவுகளை தவிருங்கள். சுய மனித சிந்தனையின் அடிப்படையில் ஒரு நல்சமூகத்தை கட்டியெழுப்புகின்ற பொறுப்பான மனிதர்களாக தாங்கள் சார்ந்திருக்கின்ற கட்சிகளின் கண்ணியத்தை காப்பாவர்களாக செயற்படுங்கள்

எந்தஒரு மனிதனும் தவறு செய்யக்கூடும் ஆனால் முட்டாளைத் தவிர வேறு எவரும் அதனைத் தொடர்ந்து செய்யமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.