இன்றைய நாள் – வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்

98
98

மேஷம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபட்டு சுற்றத்தாரின் பாராட்டைப் பெறுவீர்கள். பெற்றோர்கள், நண்பர்கள் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புகழ் திரும்பும் நாள்.

ரிஷபம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் மதிப்பு மரியாதை உயரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டிய நாள்.

சிம்மம்: கடினமான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமைதியான நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மகிழ்ச்சி பொங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் சாதாரணமாக சொல்லக் கூடிய விஷயங்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: மேலும் சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனு சரித்துப்போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.