கொரோனாவை பற்றி எச்சரித்த ஆரூடம்

kor
kor

சீனாவில் உருவாகி, தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி முன்னதாக யாருக்கேனும் தெரிந்திருக்குமா ?தெரிந்திருக்கிறது.

பழைய பஞ்சாங்கம் என்று சிலர் சாதாரணமாகச் சொல்வார்களே, அந்த பஞ்சாங்கத்தில்தான் இப்படியொரு விபரீதம் நிகழவிருக்கிறது என முன்கூட்டியே கணித்திருக்கிறது.

சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் என்றொரு பஞ்சாங்க நூலில் கோள்கள் ரீதியான பல்வேறு பலன்களுடன் இந்த வைரஸ் பற்றிய எச்சரிக்கையும் இடம் பெற்றுள்ளது.

‘விஷ ஜந்துகள் அதிகமாக இன விருத்தி அடையும், விஷ ஜந்துகளால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும். ஒரு புதிய வைரஸ் நோய் மேற்கு திக்கில் இருந்து உற்பத்தியாகும்.’ – இதுதான் தகவல்.

கொரோனா வைரஸ் நாகபாம்பிலிருந்து உற்பத்தியானதாகவும், வீட்டு விலங்குகளின் இறைச்சிக் கூடத்திலிருந்து பரவுவதாகவும் கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.