சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தடைபோட்ட ஆனந்த சங்கரி!

 சங்கரி
சங்கரி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழர் ஐக்கிய முன்னணி எனப் பெயர் மாற்றுவதில் தனக்கு உடன்பாடு கிடையாது என ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியாவிற்கு எழுத்தில் அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் கட்சியின் பெயரை தமிழிழும் சிங்களத்திலும் உச்சரிக்கும்போது எந்த மாறுபாடும் காணாதபோதும் ஆங்கிலத்தில் உச்சரித்து அதனை குறுக்கி உச்சரிக்கும்போது TUF என்றே உச்சரிக்கும் தன்மை காணப்பட்டது.

இவ்வாறு TUF என்ற உச்சரிப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்ப பெயரின் உச்சரிப்பாக காணப்படுவதனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எழுத்தில் கடிதம் அனுப்பப்பட்டு ஏதும் ஆட்சேபனை இருந்தால் 2020-02-05ற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.

இதனால் குறித்த பெயர் சுரேஸ் பிரேமச்சந்தி்னிற்கு கிடைப்பது ஆனந்தசங்கரியின் கையில் தொங்கியிருந்தது. இந்த நிலையிலேயே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது.
இதனால் சுரேஸ் பிறேமச்சந்திரன் கட்சியின் பெயராக வேறு பெயரே பரிந்துரைக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.