தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் சிரமம் – மாணவர்கள் போராட்டம்!

5 thhg
5 thhg

யாழ். உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு, இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, தமக்கு டிப்ளோமா கற்றைகளாக மாற்றினால், தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

ஆகையினால், டிப்ளோமாவை பட்டப்படிப்பாக மாற்றினாலும், பட்டப்படிப்பை டிப்ளோமா கற்கையாக மாற்ற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மட்டுமன்றி, கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் 5ம் திகதி கொழும்பு மாணவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், வெள்ளவத்தையில் நடைபெறவுள்ள இந்தப்போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் உயர் கல்வி மாணவர்கள் தமது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த கற்கைநெறி மாற்றத்தினால், உயர் தொழில்நுட்ப கல்லூரியில் தற்போது கல்விகற்கும், கற்று முடித்த மாணவர்களும் பாதிக்கப்படவுள்ளனர். இன்னும் 5 வருடங்கள் கல்வி கற்றால், தொழில் வாப்பை பெற முடியாதென்றும், அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, பட்டப்படிப்புக்களை, டிப்ளோமாவாக மாற்றும் செயற்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும், அவ்வாறு நிறுத்தாவிடின், மாணவர்களின் இந்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.