சற்று முன்
Home / தேசத்தின்குரல் / அறிவாயுதம் / தமிழர்களின் ஒற்றுமைக்காக எந்த தியாகமும் செய்யத் தயார் – இரா.சம்பந்தன்

தமிழர்களின் ஒற்றுமைக்காக எந்த தியாகமும் செய்யத் தயார் – இரா.சம்பந்தன்

தமிழர்களின் ஒற்றுமைக்காக எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

‘இன்றைய காலகட்டமானது தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டிய கட்டாயமான காலகட்டமாக உள்ளது .

ஒவ்வொருவரும் கட்சிரீதியாக பிளவுபடாமல் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.

2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் கொல்லப்பட்டனர் அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்பதை யாவரும் அறிவர் .

அந்த யுகம், அந்த ஆட்சியாளர்கள் மீண்டும் வர அனுமதிக்க முடியாது.அவர்கள் மீண்டும் வேண்டுமா என்பதை தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

நாம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அதேநேரம் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக பல விடயங்களில் விட்டுக்கொடுப்புடனேயே செயற்பட்டுள்ளோம் , கட்சி பேதம் இல்லாமல் அனைவரும் மக்களின் அபிலாசைகளுக்காக ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்க் குரல் ஊடாக அறைகூவல் விடுத்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணல்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சுன்னாகத் தண்ணீரில் கலந்த மாசு – ஐங்கரநேசன் சொன்ன ரகசியம்.

சுன்னாகத்தில் தற்பொழுது நிலவிவருகின்ற குடிநீர் பிரச்சனை தொடர்பில் வடமாகாண முன்னாள் அமைச்சரும் பசுமை இயக்கத்தின் தலைவருமான ...