சற்று முன்
Home / உலகம் / தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தனது கடுமையான கண்டனத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரதினத்தில், வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை ஜனாதிபதியின் “சிங்களப் பேரினவாதத்திற்கு” தமிழ் மொழியும், தமிழர்களின் உணர்வும் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளதை மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.

இந்தியா வந்த இலங்கை ஜனாதிபதியை வரவேற்று – நிதியுதவியும் அறிவித்து பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வழியனுப்பி வைத்தது இலங்கையில் வாழும் தமிழர்களின் கண்ணியத்தைச் சிதைத்து- சிங்களவர்களுக்கு அடிமைகளாக்குவதற்கா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் மொழி சம்பந்தப்பட்ட உணர்வு பூர்வமான இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, “இலங்கை சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து, கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனாவா ?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் அவருக்கு ...