ராஜீவ் காந்தி கொலை வழக்கு – ஆளுநருக்கு அதிகாரம்

625.500.560.350.160.300.053.800.900.160.90
625.500.560.350.160.300.053.800.900.160.90

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(07) மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் கருணை மனு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதில் சட்டப்படி முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுவர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.