உங்கள் வெற்றியை தடுக்கும் 6 காரணங்கள்

7 things stop your success 16
7 things stop your success 16

பிறர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது

மற்றவர்கள் உங்களை என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல, உங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியம். உங்கள் வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று நம்புகிறீர்களோ அதையே தைரியமாக செய்யுங்கள்.

பழைய தோல்விகளின் அவமானம்

உங்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களையே நினைத்து வருந்தாதீர்கள், அதில் பெற்ற பாடத்தை கொண்டு உற்சாகத்துடன் நினைத்த செயல்களை தொடங்குங்கள்.

என்ன வேண்டுமென்ற தெளிவு இல்லாதது

இலக்கை தெளிவாக நிர்ணயிக்காமல் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வெற்றி கிடைக்காது. நீங்கள் எதை நோக்கி போகிறீர்கள் என்று முடிவு செய்துவிட்டு முன்னேறுங்கள்.

எப்போதும் சரியாக இருத்தல்

வெற்றிக்கு குறி வையுங்கள் ஆனால் அந்த முயற்சியில் தவறு செய்வதை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் தவறில் தான் பெரிய பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். தோல்வியே வெற்றிக்கு முதல் படி.

பிரச்சனைகளை தீர்க்காமல் ஓடுதல்

சிக்கல் வந்துவிட்டதே என்று ஒதுங்காமல் எதிர்கொள்ளுங்கள், பேசுங்கள், ஆழமாக சிந்தித்து அதற்கு தீர்வை தேடுங்கள்.பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதை விட, அதனை எதிர்கொண்டு கையாள்வதே மன உறுதியை தரும்.

காலக்கெடு தீர்மானிக்காமல் இருப்பது

எந்த ஒரு செயலுக்கும் காலக்கெடு வைத்து செயல்படுவது தான் நமது இலக்கை அடைய மூலக் காரணாமாகிறது. காலக்கெடு இல்லாத முயற்சி தோல்வியிலேயே முடியும். காலக்கெடு நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்கவேண்டும் என்று வேலையை தொடங்குங்கள்.

நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.