சற்று முன்
Home / பொதுக்குரல் / ஜோதிடம் / எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயமுண்டு. அதிகாரப் பதவிகளில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். போராடி வெல்லும் நாள்.

துலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர் நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு உண்டாகும். வியாபார ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புகழ் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் திடீர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் லாபம் உண்டு. மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள் திடீர். அதிர்ஷ்டம் உண்டாகும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்

மேஷம்: தைரியமாகவும் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடுகளைகட்டும். ...