முதல்முறையாக தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ்

download 1 3
download 1 3

பெட் கிண்ண டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் லாத்வியா வீராங்கனைக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

பெட் கிண்ண டென்னிஸில் அமெரிக்கா – லாத்வியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் அமெரிக்கா சார்பில் செரீனா வில்லியம்ஸ் – லாத்வியா சார்பில் செவாஸ்டோவா ஆகியோர் விளையாடினர்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6(5)-7(7), 6-3, 6(4)-7(7) என தோல்வியடைந்தார். பெட் கிண்ண டென்னிஸில் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதற்கு முன் தோல்வியடைந்ததே கிடையாது.

இருப்பினும் செரீனா வில்லியம்ஸ் தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.