பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளலாம்

4med
4med

சஜித் மற்றும் ரணில் ஆகியோரது முரண்பாட்டின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.


இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவுடன்  எவ்வித நிபந்தனைகளுமின்றி  இணைந்துக் கொள்ளலாம் என சக்திவலு இராஜாங்க அமைச்சர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின்  புதிய கூட்டணி  விவகாரம்  தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றன.  

கூட்டணியின்  பொதுச்சின்னம்,  பொதுச்செயலாளர்  உள்ளிட்ட காரணிகள்    முன்னாள்  பிரதமர்  ரணில் விக்ரமசிங்க,  எதிர்கட்சி தலைவர்   சஜித்  பிரேமதாச  ஆகிய  இரு  பிரிவினரும்  முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.    கூட்டணியில்  உள்ளவர்கள் பல மோசடி குற்றச்சாட்டுகளுடன்  தொடர்புடையவர்கள்.


ஜனாதிபதி தேர்தலில்  வெற்றிப் பெறமுடியாத  சஜித் பிரேமதாச   பிரதமராகுவது கேள்விக்குறியது.  ஐக்கிய  தேசிய   கட்சியின் உறுப்பினர்கள் இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சியின்  உறுப்பினர்கள்   பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்ள முடியும்.


அத்துடன் நல்லாட்சி அரசாங்கம்  வெளிநாடுகளுடன்  கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். செய்துக்  கொண்ட  ஒப்பந்தங்கள் மீள்பரிசீலனை  செய்யப்படுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.