அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவுக்கு வருகைத்தர உள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று (10)அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா வருகை தொடர்பாக அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஜனவரி 16ஆம் திகதி தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுக்கு வருவார் என்று வெள்ளை மாளிகை டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் குறித்த விஜயமானது இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.