ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தாமதம்- ஜாதிக ஹெல உறுமய அறிக்கை

jhu1
jhu1

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடந்த சில தினங்களாக இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவூடாக ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சியுடன் இணங்க முடியாது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளின் பங்குபற்றுதலுடனேயே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும். செயற்குழு எந்தளவு
ஜனநாயகத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்குரியது. வேட்பாளரைத் தெரிவு செய்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவன்றி, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுவூடாக முன்னெடுப்பது மிகவும் ஜனநாயகத் தன்மையுடையதாகும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளது,