கடந்த வடக்கு மாகாண அவையில் ஒற்றுமை இருக்கவில்லை – விந்தன்

Ca q 1
Ca q 1

கடந்த வடக்கு மாகாண அவையில் ஒற்றுமை இருக்கவில்லை ,முதலமைச்சருக்கான ஒத்துழைப்பு இன்மை ,நிதி ஒதுக்கீடு மிக குறைவாக இருந்தமையால் அபிவிருத்தி ,மற்றும் உதவித்திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை .


13 ஆம் திருத்த சட்டதில் இருக்கும் சில நிபந்தனைகளால் மாகாண சபையில் புதிய ஆளணியை உருவாக்க கூடிய அதிகாரம் மாகாணசபைகளுக்கு இல்லாமையால் பெரும் நெருக்கடிகள் இருந்தன .

வெற்றிடங்களுக்கே நியமனம் வழங்கக்கூடியதாக இருந்ததே அன்றி புதிய ஆளணியை உருவாக்கவும் மாகாண அரசால் முடியவில்லை .


இதனை விட முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாண அரசியல் விடுத்து தமிழ் மக்களின் உரிமை அரசியலை நடைமுறைப்படுத்த முற்பட்டமையால் மாகாண சபையினை திருப்திகரமாக நடத்தமுடியவில்லை என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் எமது தமிழ்க்குரல் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார் .