சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் ஆகும்.

இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது.

இதனை குணப்படுத்த என்னதான் மருந்துகள் இருந்தாலும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்த சித்த மருத்துவமும் பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும் சித்த மருத்துவம் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

அருகம்புல் சாறு அதிகாலையில் பருகவும்.

துளசி இலை 10 இலைகள் மென்று சாப்பிடவும்.

வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தண்ணீர் குடிக்கவும்.

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கவும்.

முசுமுசுக்கை இலையை வதக்கி சாப்பிடவும்.

கற்பூரவல்லி இலை மூன்று, மிளகு மூன்று, வெற்றிலை இரண்டும் சேர்ந்து நீரில் கொதிக்கவைத்து வற்றியவுடன் அந்த நீரைப் பருகவும்.

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சளி வெளியேறும்.

இருமல் இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடவும்.

அதிகாலையில் இருமல் இருந்தால் கடுகை அரைத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

புதிய முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்

நிலவின் மர்மமான பகுதியை நோக்கிய சந்திரயான் 2 எனும் விண்கலத்தினை அனுப்பும் முயற்சியால் உலக நாடுகளின் ...