யாழில் சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு

image7
image7

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் , மீன்பிடி , நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் விழா இன்று (11) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண கமத்தொழில் அமைச்சின் செயலர் தெய்வேந்திரம் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு, குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ,முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்

விவசாய அமைப்பின் தலைவரால் விவசாய காப்புறுதி, உரத்தட்டுப்பாடு,ஓய்வுதியம்,மானியம், கட்டாக்காலி நாய்கள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய பத்திரம் ஒன்று அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்கப்பட்டது.

சிறப்புரை ஆற்றிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் பெரியசாமி விவசாயத்தின் போது விவசாய தகவல் தொடர்பாடலால் கிடைக்கும் நன்மைகளை பற்றி உரையாற்றினர்.

தொடர்ந்து உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் விவாசயம் சம்மந்தமான இவ் விழாவிற்கு அழைத்ததுக்கு விழாக்குழுமத்திற்கு நன்றி தெரிவித்து யாழ்ப்பாணத்தை அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி தேவை, புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டமான “நிறைவான கிராமம்” திட்டம் மூலம் வருமானங்களை அதிகரிக்ககூடிய திட்டம் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.

விவசாயக்கிணறு,விவசாய வீதி , வீவசாய வேலி என்ற வருமானத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன்னுரிமை படுத்துவேன் எனவும் குறிப்பிட்டார்.

இறுதியாக மாவட்ட ரீதியில் விவசாயம் பண்ணை வளர்ப்பு பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களை பெற்றவர்களுக்கான கெளரவிப்பு இடம்பெற்றது.

கெளரவ விருந்தினர்களாக தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் சீ.பெரியசாமி மற்றும் கமத்தொழில்சார் வைத்தியர்கள், விவசாய போதனாசிரியர்கள், கமத்தொழில் சார், உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.