சுவையான தர்பூசணியை கண்டறிவது எப்படி

images 2 2
images 2 2

அனைவரும் விரும்பி உண்ணும் பழம் தர்பூசணி.

ஆனால், சில சமயங்களில் இந்த தர்பூசணி சுவையே இல்லாமல் இருக்கும்.

இனிக்காத தர்பூசணி பழம், உப்பில்லாத உணவை போன்றது. ஆனால் எந்த தர்பூசணி சுவையானதாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள வழிகள் உள்ளது.

தர்பூசணியில் ஆண், பெண் என இருவகை இருக்கிறது என்பது உண்மை. ஆனால் ஆண் தர்பூசணிகள் நீளமாக இருக்கும்.

பெண் தர்பூசணிகள் வட்டமாக அல்லது கொழுத்து தடித்து காணப்படும். இதில் பெண் தர்பூசணி தான் மிகவும் இனிப்பாக இருக்கும்.

பெரிய தர்பூசணிகள் தேர்வு செய்வது தவறு. பெரிய தர்பூசணிகள் எப்போதும் மிகவும் சுவையாக இருக்காது. சிறியவை தான் கூடுதல் இனிப்பாக இருக்கும்.

தர்பூசணியின் நுனி பகுதி பச்சையாக இருப்பதை காட்டிலும், காய்ந்து அல்லது உலர்ந்தது போல இருந்தால், அந்த தர்பூசணி பழுத்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.