வடக்கு இங்கிலாந்தில் பனிப்புயல்

blizzard
blizzard

டென்னிஸ் புயல் காரணமாக கம்ப்ரியா, நோர்தம்பர்லன்ட் மற்றும் ஸ்கொட்லாந்தில் பனிப்புயல் நிலைமைகள் ஏற்படக்கூடும் என்று வானிலை அலுவலகம் கூறுகிறது. அத்துடன் 50 வெள்ள எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் 43, ஸ்கொட்லாந்தில் 6 மற்றும் வேல்ஸில்1 என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 10cm வரை பனிப்பொழிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியாரா புயலின் தாக்கம் குறைவதற்குள் அடுத்துவரும் புயலினால் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடஅயர்லாந்தில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்படுத்தும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

60 மைல் வேகத்தில் மலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தரைப்பகுதியில் 50 மைல் வேகத்தில் காற்று வீசும் எனினும் வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.