நீங்கள் அறிந்திடாத இலங்கையின் அதிசயம் ஒன்று

6 n
6 n

புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட நுவரெலியா கண்டி பிரதான பாதையில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் வகுகவ்பிட்டிய பிரதேசத்தில் “ஊற்று மாரியம்மன்” என்ற ஒரு சிறிய கோவில் காணப்படுகின்றது.

இந்த ஆலயம் இருக்கும் இடம் சுமார் 05 ஏக்கர் கொண்ட காட்டு பாதுகாக்கபட்ட பிரதேசமாகும். இந்த இடத்தில். விசித்திரமான ஊற்று நீர் ஒன்று காணப்படுகின்றது.

ஒரு பானையில் நீரை நன்கு கொதிக்க வைத்தால் அந்த நீர் எவ்வாறு தொதித்து பொங்கி எழுமோ அந்த அளவிற்கு இந்த நீர் ஓர் குறிபிட்ட இடத்தில் இருந்து பொங்கி வருகின்றது.

இந் நீர் மிகவும் குளிர்மையான செறிவு கூடியதாக விரும்பி பருகுவதற்கு சுவையானதாகவும் மருத்துவ குணமிக்கதாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த இடத்தில் “காக்கா பொன்னு” என்று சொல்லக் கூடிய கனிய வளமும் காணப்படுவதால் நீருடன் தங்க துகள்கள் போன்று காக்கா பொன்னும் நீரோடு பொங்கி எழுகின்றது.

பார்ப்பதற்கு மிகவும் புதுமையாகவும் மனதிற்கு ஆறுதலாகவும் கோயிலும் காணப்படவதினால் தெய்வீக தனமாகவும் வியக்கதக்க வகையில் காணப்படுகின்றது.

எவ்வளவுதான் வெயில் காலம் வந்தாலும் இந்த நீர் ஊற்று வற்றுவதில்லை. சிறிய ஊற்றாக வெளி வந்து ஆறாக ஓடுகின்றது இந்த நீரை மக்கள் குடிப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் பாவித்து வருகின்றனர்.

பொதுவாக புஸ்ஸல்லாவ இறம்பொடை நுவரெலியா போன்ற இடங்கள் இராமாயனத்திற்கு பெயர் போன இடங்கள்.

நுவரெலியாவிலேயே சீதை அம்மன் கோவில் காணப்படுகின்றது. அசோகவனமும் காணப்படுகின்றது. அரம்பத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இருந்தே அசோகவனம் ஆரம்பித்து உள்ளது. காலப்போக்கில் தேயிலை உற்பத்திக்காக காடுகள் அழிக்கபட்டு அசோகவனம் வேறாக பிரிக்கபட்டு விட்டது புஸ்ஸல்லாவ வேறாக்கபட்டுவிட்டது.

இராமாயணத்தில் இராவணன் சீதை அம்மனை இந்தியாலில் இருந்து இராமேஸ்வரம்¸ மன்னார் ,மாத்தளை¸ புஸ்ஸல்லாவ¸ வழியாக தனது புஸ்பக விமானத்தில் நுவரெலியாவிற்கு அழைத்து செல்லும் வழியில் சீதை அம்மன் இராமனை நினைத்து விட்ட கண்ணீரின் ஒரு துளி இப்பிரதேசத்தில் விழுந்துள்ளது.

இந்த கண்ணீர் விழுந்த இடம் தற்போதும் சீதை அம்மனின் கண்ணீராக பொங்கி நீராக வருகின்றது என்ற வரலாறும் உள்ளது.

அது உண்மையாக இருக்கலாம் காரணம் பல ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள சோகம தோட்டத்தில் காணப்பட்ட அம்மன் சிலை ஒன்று களவாடப்பட்டு வேர் இடத்திற்கு இவ்வழியாக கொண்டு செல்லும் போது. இந்த இடத்தில் அந்த சிலை இயற்கையாகவே பூமிக்கு அடியில் சென்று விட்டதாம். அன்று முதல் இந்த நீர் ஊற்று உருவாகி சிலையின் நிறத்தில் தங்க துகள்களுடன் பொங்கி வருவதாக கூறுகின்றனர். தற்போதும் இந்நிலை காணப்படுகின்றது.

இராமயத்துடன் தொடர்பு கொண்டதால் என்னவோ குறித்த இடத்தில் அனுமானின் உருவம் ஒன்று இயற்கையாகவே மரம் ஒன்றில் உறுவாகி உள்ளது. இதையும் மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த காட்டு பகுதியில் குரங்குகளும் வசித்து வருவதுடன் தனக்கு உணவு தேவை ஏற்படும் போது ஆலயத்திற்கு வந்து உணவை பெற்று செல்கின்றன. அசோகவனத்தை ஒத்த இயற்கை காட்டு வளமும் இங்கு காணப்படவதுடன் அரசாங்கம் இதனை பாதுகாத்து வருகின்றது.

சோகம தோட்ட மக்கள் தற்போதும் தங்கள் ஆலயத்தில் திருவிழாக்கள் நடக்கும் சந்தர்பத்தில் இந்த நீர் ஊற்றில் நீர் எடுத்து கரகம் பாலித்து திருவிழாக்களை நடாத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்த இடத்தில் அம்மனை வைத்து “ஊற்று மாரியம்மன்” என்ற பெயரில் ஆலயம் அமைத்து வணங்கி வருகின்றனர்.

இந்த ஆலயத்தை இப்பிரதேசத்தை சேர்ந்த ஆலய தர்மகர்த்தா கிருஸ்ணபிள்ளை வேலுராமன் அய்யா அவர்கள் மிகவும் அர்பணிப்புடன் நடாத்தி பக்தர்களுக்கு சேவை செய்து வருகின்றார்;.

இவரின் முயற்சியினாலயே இந்த ஆலயம் உறுவாகியுள்ளது. இவருக்கு இவரது மகள்மார்கள் மிகவும் உதவியாக இருக்கின்றார்கள்.

இந்த ஆலயத்திற்கு இன மத பேதம் இன்றி அனைத்து மக்களும் வந்து வணங்கி செல்கின்றனர்.

பக்தர்கள் தாங்கள் கேட்கும் அனைத்தையும் அம்மன் வழங்கி வருகின்றாள். பிள்ளைபேறு¸ செய் சூனியம் நினைத்த காரியங்கள் நிறைவேற்றல்¸ கூடிய விரைவில் திருமணம்¸ தோசம் கழிதல்¸ தீராத நோய் பிணி தீர்த்தல்¸ நினைத்த காரியம் நிறைவேற்றல் இவை அனைத்தும் நிறைவேறி வருகின்றன.

.தற்போது உலக சைவ திருச்சபையின் தலைவர் கலாநிதி அடியார் விபுலாநந்தா தலைவரின் ஏற்பாட்டில் “ஊற்றுலிங்கேஸ்வரர்” சிவலிங்கம் ஒன்றும் பிரதிஸ்டை செய்யபட்டுள்ளது.

தனியாக இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வந்த ஊற்று மாரியம்மன் ஊற்றுலிங்கேஸ்வரருடன் இணைந்து அருள் பாலித்து வருகின்றாள். பக்தர்கள் ஊற்று நீரை எடுத்து சிவனுக்கு தாங்கலாகவே ஊற்றி வழிபட்டு வருகின்றனர். பிரதோஷ விரதம் மற்றும் பிதிர் கடன்களை இங்கு நிறைவேற்றி வருகின்றனர்.