நாடாளுமன்றம் கலைக்கப்படும் நாள் அறிவிப்பு !

1 sa 1
1 sa 1

மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 19ஆம் நாள் புதன்கிழமை கூடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 14நாட்களுக்கிடையில் வேட்புமனு கோரப்படவேண்டும். அதனையடுத்து 6வாரங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 25க்கும் 28க்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை காணப்படுவதால் இது குறித்து ஆராயும் பொருட்டே புதன்கிழமை ஆணைக்குழுவின் விஷேட கூட்டம் நடைபெறவிருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய நாடாளுமன்றத்தை மார்ச் முதலாம் நாளுக்கு ப் பின்னர் எந்த வேளையிலும் கலைக்க முடியுமென சட்ட மாஅதிபர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கிறார்.