சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு கத்திக்குத்து !

இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு கத்திக்குத்து !

வவுனியா – சாளம்பைகுளம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை வீட்டில் இருந்த சமயம், அவரது கணவரின் உறவினர் கத்தியால் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சாளம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த அஸ்மா (வயது-30) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் ‘கொரோனா!

யாழ்ப்பாணம், தாவடியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் குடும்பங்களில் 18 பேரின் இரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் பரிசோதனைக்காக ...