புதிய கூட்டணி சந்திரிக்காவின் நிலைப்பாடு என்ன?

1 erw
1 erw

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து சந்திரிக்கா இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகிகயுள்ளது.

இதேவேளை, சுதந்திர தினத்திற்காக இடம்பெற்ற நிகழ்விலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டிருந்தார்.

அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் ஜனாதிபதி மிகவும் நட்புறவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணியுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சந்திரிக்கா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படவுள்ளார். தவிசாளராக முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.