பொதுத் தேர்தல் தொடர்பாக 143 கட்சி விண்ணப்பங்கள்

1 tr 1
1 tr 1

பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று   மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் நாள் ஆரம்பமானது.

அதற்கமைய கிடைத்துள்ள விண்ணப்பங்களை பரீசீலனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பரிசீலனைகளின் பின்னர், புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக தெரிவு செய்யப்படவுள்ள அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், அதன் பின்னரே புதிய கட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 70 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.