இங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு

Tenb
Tenb

டென்னிஸ் புயலினால்  பாதிப்புக்குள்ளான செவர்ன் நதிக்கு அருகிலுள்ள நகரங்கள் நோக்கி அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

பலத்த காற்றுடன் ஏற்பட்ட கடுமையான மழையினால் அப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

இங்கிலாந்தில் மூன்று கடுமையான எச்சரிக்கைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் இன்னமும் உள்ளன.

வோர்ஸ்ரஷையரில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் இறந்துவிட்டதாக பொலிஸார் கருதுகின்றனர்.

சில A வீதிகள் மூடப்பட்டு ரெயில் பாதைகள் சீர்குலைந்த நிலையில், இங்கிலாந்து முழுவதும் போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் தடைபட்டுள்ளன.

தெற்கு வேல்ஸ் பள்ளத்தாக்குகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக உயர்ந்த நீர்மட்டம் காணப்படுகின்றது என்று வேல்ஸின் இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.

பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் வீதிகளில் தடைகள் உருவாகியுள்ளன.

ரென்பரியில் வீடுகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்களுக்கான நிவாரண மையம் நகரத்தின் உயர்நிலைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் சிறிய படகுகள் மூலம் இன்று திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.