‘பால்கன் 9’ என்ற ராக்கெட் 50வது முறையாக விண்ணில் ஏவப்பட்டது

3 tt
3 tt

வாஷிங்டன் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலன் மஸ்க். இவரின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பல முறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை தயாரிக்கிறது.

இந்தவகையில் 49 முறை ராக்கெட்டுகளை அனுப்பி 300 செயற்கைக் கோள்களை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘பால்கன் 9’ என்ற ராக்கெட் 50வது முறையாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் 60 செயற்கைக் கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன.

அவற்றை ராக்கெட் ‘பூஸ்டர்’ எனப்படும் பகுதி திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தி விட்டு பூமிக்கு திரும்பத் துவங்கியது. அது தரையிறங்க கடற்பகுதியில் பிரத்யேக மிதவைக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் ராக்கெட் அங்கு இறங்காமல் கடலில் விழுந்தது.அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2016 ஜூனில் அனுப்பிய ராக்கெட்டும் வெற்றிகரமாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய பின் பூமிக்கு திரும்பும் போது வழிமாறி கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.