சிறப்பு திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு வீசா இல்லை

1 dre
1 dre

பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் வழங்கப்படவுள்ள வீசா திட்டத்தின் கீழ் திறமை குறைந்த தொழிலாளர்களுக்கு வீசா வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

குறைந்த ஊதிய அடிப்படையில் ஐரோப்பியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதிலிருந்து விலகிச் செல்லுமாறும் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும், ஓட்டோமேஷன் தொழில்நுட்பத்தை வளர்ப்பதிலும் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

டிசெம்பர் 31 ஆம் திகதி பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களின் சுதந்திர நடமாட்டம் முடிவடைந்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளின் குடிமக்கள் சமமாகவே நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

விரோதமான சூழல் உருவாக்கம் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு கடினமானது என்று தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல்; புதிய அமைப்பு முறை பிரித்தானியாவிற்குப் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டுவரும் என்று கூறினார்.

இன்று பிபிசியின் காலை நேர நிகழ்ச்சியில் பேசுகையில்; திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பதுடன் குறைந்த திறன்களுடன் இங்கிலாந்துக்கு வரும் மக்களின் அளவைக் குறைக்கவும் அரசாங்கம் விரும்புகிறது என்று தெரிவித்தார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் எங்களுக்கு அதிக திறமையான, அதிக பயிற்சி பெற்ற மற்றும் அதிக உற்பத்தி பொருளாதாரம் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.