சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்முன்னிலைப் படுத்தப்படுவர்

குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்முன்னிலைப் படுத்தப்படுவர்

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமை பெற்றுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.”

இவ்வாறு சட்டம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் விசேட பயிற்சி பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் திருப்திப்படும் வகையில் இல்லை’ என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பொலிஸார், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு   பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் சட்டம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுபடுத்தலை வாங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தொலைபேசி நிறுவனங்கள் வழங்கவுள்ள சலுகை!

இலங்கை மக்களுக்கு இணைய வசதிகளை முடிவுமானளவு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ...